இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சிவலோக நாதர்
இறைவி :ஸ்ரீ சௌந்தர நாயகி
தல மரம் : மரம்
தீர்த்தம் : தீர்த்தம்
Arulmigu Nanthanar Temple, Chidambaram | அருள்மிகு ஸ்ரீ நந்தனார் கோயில் - சிதம்பரம்
திருநாளைப்போவார் என்று போற்றப்பெறும் நந்தனார் அவதரித்த தலம். இன்று மேலாநல்லூர் எனப்படுகிறது. நந்தனார் பிறந்த ஊர் மேலா நல்லூர் எனப்படும் மேற்கா நாட்டு ஆதனூர்என்பதே. . இதுவே திரிந்து மேலாநல்லூர் ஆனது
தல வரலாறு:
இவ்வூர் திருப்புன்கூரில் இருந்து ஒரு கிமி மேற்கில் உள்ளது. அவருக்காக நந்தியை விலகசெய்த திருப்புன்கூர் கோயில் இவ்வூர் சிவன்கோயிலில் தென்கிழக்கு மூலையில் நந்தனார் சிறு சன்னதியில் உள்ளார்.. ஆதனூரிலிருந்து கொள்ளிடம் தாண்டி, தில்லை வந்தடைந்த நந்தன், 3 நாட்கள் ஊருக்குள்ளே போகாமல் ஊரின் தெற்கு பகுதியில் உள்ள ஓர் தோப்பிலேயே தங்கினார். அதன் பின் சபாநாயகர், தில்லைவாழ் அந்தணர் தம் கனவில் தோன்றி நந்தனாரை சித்ஸபா ப்ரவேசத்திற்கு பணித்ததும், அதனைத் தொடர்ந்து நந்தனார் யாக குண்டத்தில் இறங்கி தன் புனித தன்மையை வெளிக்காட்டி இறைவனோடு கலந்தார் என்பது நாம் அறிந்ததே. தில்லை நகர் தன்னுள் பல வரலாற்று எச்சங்களை இன்றும் தாங்கியுள்ளது, நந்தனார் தங்கியிருந்ததாகச் சொல்லப்படும் இடம் என்று. ஊருக்கு வெளியே காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் “ஓமக்குளம்” என்ற ஒரு பகுதியும், அங்கே சிவலோகநாத ஸ்வாமி என்ற பெயரில் ஒரு ஆலயமும் உள்ளதை காணலாம். நந்தன். தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவராக இருந்தாலும் இறைவனான சிவ பெருமானை தன் நெஞ்சிலே உயர்ந்த இடத்தில் வைத்து வணங்கி வருபவர். கோயில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது. யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது தான் இவருடைய வேலை. அதில் கிடைக்கும் பணத்தை தனக்காக இல்லாமல் சிவாலய திருப்பணிகளுக்கு செலவு செய்வார்.. எப்படியாவது சிதம்பரம் சென்று இறைவனை தரிசிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வேண்டி வந்தார். நந்தனை யாராவது, “எப்போது நீ சிதம்பரம் செல்வாய்” எனக் கேட்டால், “நாளை போவேன்” என்று சொல்வார். இதனால் அவரை நாளைபோவார் என அழைத்தனர். இவர் தங்கிய இடங்கள் சிதம்பரத்தில் இரண்டு இடங்களாக குறிக்கின்றனர். ஒன்று இந்த ஓமகுளக்கரை இன்னொன்று நந்தனார் பள்ளி பகுதியில் உள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கியது இறைவன் சிவலோக நாதர் இறைவி சௌந்தர நாயகி விநாயகர் சண்டேசர் நவகிரகங்கள் பிரகாரத்தில் உள்ளன.
திருக்கோயில் முகவரி :
ஸ்ரீ சிவலோக நாதர் கோயில் - சிதம்பரம் சிதம்பரம் கடலூர் மாவட்டம். ,
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இந்த ஆலயம் காலை 6 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்
அமைவிடம்: